For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தைவானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு!

05:56 PM Apr 22, 2024 IST | Mari Thangam
தைவானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 5 5 ஆக பதிவு
Advertisement

தைவான் நாட்டின் கிழக்கு ஹுவாலியன் பகுதியில் ரிக்டர் அளவில் 5.5 என்ற பலத்த நிலநடுக்கம் இன்று மாலை 5:08 மணியளவில் ஏற்பட்டதாக அந்நாட்டு மத்திய வானிலை ஆய்வு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

தைவானில் ஏப்ரல் 3 ஆம் தேதி 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியன் மலைப்பகுதியில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் ஹுவாலியன் நகரின் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். கடைசியாக ஏப்ரல் 13ஆம் தேதி ஒரு கல் குவாரியில் மீட்புப் பணியின்போது மற்றொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 5:08 மணியளவில் மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகரான தாய்பே-யிலும் உணரப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) இதன் அளவை 5.5 ரிக்டர் என்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழத்தை 8.9 கிலோமீட்டர் என்றும் கணக்கிட்டு உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தில் இருந்து மீளாத மக்களுக்கு ஒரே மாதத்தில் 2வது நிலநடுக்கம் என்பதும் பெரும் அதிர்ச்சி கலந்த பயத்தை கொடுத்துள்ளது.

ஏப்ரல் 3 ஆம் தேதி நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று மாலை பதிவான நிலநடுக்கம் பெரியது என்று AFP பத்திரிகையாளர் தெரிவித்தார். தைவான் இரண்டு பெரிய நிலத்தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement