For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் லாக் டவுனா.! 2024 உலகம் முழுவதும் குரங்கம்மை தாக்கும் அபாயம்.! எச்சரிக்கை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம்.!

02:41 PM Dec 19, 2023 IST | 1newsnationuser4
மீண்டும் லாக் டவுனா   2024 உலகம் முழுவதும் குரங்கம்மை தாக்கும் அபாயம்   எச்சரிக்கை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம்
Advertisement

கடந்த வருடம் உலகம் முழுவதும் 90 ஆயிரம் மக்களை பாதித்த குரங்கம்மை நோய் மீண்டும் வேகமாக பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த நோய் டிசம்பர் மாதம் இறுதியிலிருந்து சர்வதேச அளவில் பரவலாம் எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

இந்த அம்மை நோய் முதன் முதலில் 1970 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாட்டைச் சார்ந்த பத்து வயது சிறுவன் முதன் முதலில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டான். குரங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவியதால் இது குரங்கு அம்மை நோயென அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே அறியப்பட்ட இந்த நோய் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருக்கிறது.

மேலும் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி இந்த குரங்கம்மை நோய்க்கு ஜப்பானை சார்ந்த ஒருவர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நோய் சர்வதேச அளவில் வேகமாக பரவி வருவதால் குரங்கம்மை நோய் குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக இந்த நோய் பாலியல் உறவுகள் மூலம் பரவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

மேலும் நோய் தொற்று ஏற்பட்ட அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கால் ஆசன வாய் மற்றும் பிறப்புறுப்புகளில் சொறி சிரங்கு ஏற்பட்டு அவற்றிலிருந்து சீழ் வடியும் நிலை உருவாகும். மேலும் இந்த நோய்க்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் எச்சரித்திருக்கிறது.

Tags :
Advertisement