தென் கொரியாவை எதிரி நாடாக அறிவித்தது வட கொரியா..!! - அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம்
வட கொரியா அதன் புதிதாக திருத்தப்பட்ட அரசியலமைப்பில் தென் கொரியாவை விரோத நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான சாலை மற்றும் ரயில் இணைப்புகளை வட கொரியா தகர்த்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்ததுள்ளது.
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே பதற்றம் நிலவி வருவதை உலகமே அறிந்துள்ளது. இதற்கிடையில், வடகொரியா ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியா தனது சமீபத்தில் திருத்தப்பட்ட அரசியலமைப்பில் முதன்முறையாக தென் கொரியாவை எதிரி நாடு என்று வரையறுத்துள்ளது.
அரசியலமைப்பைத் திருத்த வட கொரிய நாடாளுமன்றம் கடந்த வாரம் இரண்டு நாட்கள் கூடியது. அதாவது தென் கொரியாவை நாட்டின் பிரதான எதிரியாக அறிவிக்கவும், அமைதியான கொரிய ஒருங்கிணைப்பு என்ற இலக்கை அகற்றவும், வட கொரியாவின் இறையாண்மை வரையறுக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்ற அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் வலியுறுத்தினார். இதையடுத்து கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடி, அந்நாட்டின் அரசியலமைப்பு மாற்றி எழுதப்பட்டு இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தென் கொரியா வட கொரியா இடையேயான சாலைகள், இரயில் பாதைகள் வட கொரிய அரசால் அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து வட கொரியா தனது அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுள்ளது. தென் கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடுவது இதுவே முதல்முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தற்போது வடகொரியாவின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; வரும் 20ஆம் தேதி மீண்டும் சம்பவம் இருக்கு..!! இன்று 8 மாவட்டங்களில் பொளக்க போகும் கனமழை..!!