For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மற்றொரு அதிர்ச்சி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது தாக்குதல்..!!

Another incident of attack on a doctor in Chennai has caused great shock.
07:07 PM Nov 13, 2024 IST | Mari Thangam
மற்றொரு அதிர்ச்சி   சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது தாக்குதல்
Advertisement

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு முடிவுக்கு வருவதற்குள் சென்னையில் மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஹரிஹரன் என்ற மனநல மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்குதல் நடத்தியுள்ளார். மருத்துவரை தாக்கிய நபர் திருவான்மியூரைச் சேர்ந்த பரத் (35) என்பது தெரியவந்துள்ளது. பரத் என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.

அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சைக்காக வந்து செல்கிறார். அந்த வகையில் இன்று சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனை வந்தபோது மருத்துவர் ஹரிஹரனை முகத்தில் குத்தி சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி உள்ளார். இதில் காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

Read more ; டாக்டருக்கு கத்திக்குத்து.. மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!!

Tags :
Advertisement