For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"மறுபடியும் முதல்ல இருந்தா".. காங்கிரஸில் இருந்து பிஜேபிக்கு தாவும் மூத்த தலைவர்.? தலைவலியில் congress மேலிடம்.!

02:57 PM Feb 18, 2024 IST | 1newsnationuser7
 மறுபடியும் முதல்ல இருந்தா    காங்கிரஸில் இருந்து பிஜேபிக்கு தாவும் மூத்த தலைவர்   தலைவலியில் congress மேலிடம்
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்ல இருப்பதாக வரும் செய்திகள் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அசோக் சவான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனது மகனுடன் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாராளுமன்றத்தில் ராஜ்யசபா சீட் கேட்டு கோரிக்கை வைத்திருந்தார் கமல்நாத்.

மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் கமல்நாத் மீது அதிருப்தியில் இருந்த காங்கிரஸ்(congress) மேலிடம் இவரது கோரிக்கையை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது மகனுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு முக்கிய தலைவரான மணிஷ் திவாரி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவ இருப்பதாக புதிய செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும் அவர் பஞ்சாப் மாநில லூதியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த தகவல்களை காங்கிரஸ் மேலிடம் மறுத்து இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்களின் இல்லத்தில் தங்கி இருந்து மனிஷ் திவாரி ஆலோசனை செய்து வருவதாக காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவுகிறார் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் காங்கிரஸ் மறுத்துள்ளது. சமீபத்தில் முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதால் எவ்வாறு கையாள்வது என காங்கிரஸ் கட்சி குழப்பத்தில் இருக்கிறது.

English Summary:
As per the news sources another congress leader manish tiwary might join bjp party.But congress says its a not true.

Tags :
Advertisement