மீண்டும் மோதல்..!! ஆளும் திமுகவை அட்டாக் செய்த திருமா..? அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் பரபரப்பு பேட்டி..!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்தச் சம்பவத்தில் ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், ஞானசேகரன் செல்போனில் யாரையோ அழைத்துப் பேசியதாகவும் அதன் பிறகு அந்த சாருடன் இருக்க வேண்டும் என மிரட்டியதாகவும் மாணவி போலீசாரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த சம்பவத்தில் மேலும் ஒருவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "பெண்களுக்கான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதை விசிக அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டு ள்ளார். ஆனால், கைதான நபரைத் தாண்டி வேறு சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கும் உடனடியாக ஜாமீனும் வழங்கக் கூடாது. அவரை சிறையில் வைத்தபடியே விசாரணையை முடித்து தண்டனை வாங்கி தர வேண்டும்" என்று பேசியுள்ளார். யார் அந்த 'சார்' என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது குறித்த கேள்விக்கு, "இதுபோல ஒரு சந்தேகம் இருப்பதால்தான் புலன் விசாரணை தேவை. குற்றம் செய்த யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று திருமாவளவன் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவரே இதில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Read More : டேங்கர் லாரி கவிழ்ந்ததால் லீக்கான கேஸ்..!! பள்ளிகளுக்கு விடுமுறை..!! கோவையில் பரபரப்பு..!!