Chennai : மார்ச் 2-3 ஆகிய தேதிகளில் IIT வளாகத்தில் வருடாந்திர எக்ஸ்போ...! முன் பதிவு கட்டாயம்..!
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), கல்வி நிறுவன திறந்தவெளி அரங்கு 2024 (Institute Open House 2024) நிகழ்வின்போது அதிநவீன ஆய்வகங்களைப் பார்வையிட வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ (IITM for All) முன்முயற்சியின் ஒரு பகுதியாக 2024 மார்ச் 2-3 ஆகிய தேதிகளில் இக்கல்வி நிறுவன வளாகத்தில் வருடாந்திர எக்ஸ்போ நடைபெறுகிறது.
அத்துடன், மாணவர்களால் இந்தியாவில் நடத்தப்படும் மிகப் பெரிய அமைப்புகளில் ஒன்றான ஐஐடி சென்னையின் புத்தாக்க மையம் (Centre for Innovation – CFI) 2024 மார்ச் 3-ந் தேதியன்று ஏற்பாடு செய்துள்ள சிஎப்ஐ திறந்தவெளி அரங்கு-2024 (CFI Open House) நிகழ்வையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ எக்ஸ்போ-வைப் பார்வையிட விரும்புவோர் 2024 பிப்ரவரி 29-ந் தேதிக்குள் shaastra.org/register இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் நடத்தும் இந்த முன்முயற்சியின்போது, ஐஐடிஎம்-ன் மேம்பட்ட ஆய்வகங்களை பொதுமக்களுக்கு காண்பிக்க இக்கல்வி நிறுவனம் முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது. கல்வி நிறுவனத்தின் அழகான வளாகத்தை அனைவரும் பார்வையிடவும், எதிர்காலத் தலைவர்களாக பரிணமிக்கும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமையும்.
English Summary: Annual Expo at IIT Campus on March 2-3