முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

1979இல் உருவான உல்ஃபா பிரிவினைவாத அமைப்பு கலைக்கப்பட்டதாக அறிவிப்பு..!! ஆயுதங்களும் ஒப்படைப்பு..!!

07:59 AM Jan 25, 2024 IST | 1newsnationuser6
Advertisement

இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் உல்ஃபா (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) அமைப்பு கடந்த 1979ஆம் ஆண்டு வடக்கு அசாமின் சிவசாகரில் உருவானது. ஆயுதம் ஏந்திய இந்த பிரிவினைவாத அமைப்பு, அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்தது. இதனால் 1990ஆம் ஆண்டு இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, உல்ஃபா அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடந்த 12 ஆண்டுகளாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

Advertisement

இதன் பலனாக அசாம் மற்றும் மத்திய அரசுடன் இந்த அமைப்பு கடந்த டிசம்பர் 29ஆம் தேதி முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வன்முறையை கைவிடவும் தேசிய நீரோட்டத்தில் இணையவும் அந்த அமைப்பு ஒப்புக்கொண்டது. இந்நிலையில், இந்த அமைப்பின் கடைசி பொதுக்குழு கூட்டம் சிபாஜர் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் அடிப்படையில் உல்ஃபா அமைப்பை கலைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து உல்ஃபா பொதுச்செயலாளர் அனுப் சேத்தியா கூறுகையில், “எங்கள் அமைப்பின் 9 முகாம்களை சேர்ந்த 900 உறுப்பினர்களின் கூட்டம் மத்திய அசாமின் மங்கல்டோய் முகாமில் நடைபெற்றது. இதில், அமைப்பை கலைக்கும் முடிவு அங்கீகரிக்கப்பட்டது. முகாம்கள் இருந்த நிலத்தை விவசாயத்துக்காக எங்கள் உறுப்பினர்களுக்கு அசாம் அரசு வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள ஆயுதங்கள் இம்மாதம் நடைபெறும் விழாவில் அரசிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.

2011 பிப்ரவரியில் உல்ஃபா இரண்டு குழுக்களாக பிரிந்தது. அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான குழு, வன்முறையை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. பரேஷ் பரூவா தலைமையிலான குழு பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. 'உல்ஃபா இன்டிபென்டன்ட்' என்ற பெயரில் செயல்பட முடிவு செய்தது. மியான்மர் மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளில் முகாமிட்டுள்ள இக்குழுவில் 200 உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
அசாம் மாநிலம்உல்ஃபா பிரிவினைவாத அமைப்புபேச்சுவார்த்தைமத்திய அரசு
Advertisement
Next Article