For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Exam: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு... தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.‌‌..!

Announcement that students of 10th, 11th and 12th standard can apply for the public exam... separate exam
06:32 AM Dec 09, 2024 IST | Vignesh
exam  10  11  12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு    தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு ‌‌
Advertisement

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து, தனித்தேர்வர்கள் டிசம்பர் 17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

இதுதவிர தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வு கால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Tags :
Advertisement