சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
பெளர்ணமியின்போது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அதன்படி, ஒவ்வொரு பெளர்மணி அன்றும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள்.எனவே பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம்.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதி 527 பேருந்துகளும், 23ஆம் தேதி 628 பேருந்துகளும் இயக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சென்னை மாதவரத்தில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதி 30 பேருந்துகளும், 23ஆம் தேதி 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22ஆம் தேதி அன்று 910 பேருந்துகளும், 23ஆம் தேதி அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படுகிறது.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலம் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்துகள் 40, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதிகளில் இயக்கப்படும். மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் Mobile APP மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதியினை பொதுமக்கள் பயன்டுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More: ’மீண்டும் தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வரும்’..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி..!!