For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அசத்தல்...! காசி தமிழ்ச் சங்கமம் 3.O.. மாணவர்களுக்கு ரூ.30,000 பரிசுத்தொகை அறிவிப்பு...!

Announcement of Rs. 30,000 prize money for Kashi Tamil Sangamam 3.O. students
06:25 AM Jan 19, 2025 IST | Vignesh
அசத்தல்     காசி தமிழ்ச் சங்கமம் 3 o   மாணவர்களுக்கு ரூ 30 000 பரிசுத்தொகை அறிவிப்பு
Advertisement

காசி தமிழ்ச் சங்கமம் 3.O-ஐ முன்னிட்டு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அகத்தியர் குறித்த கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து சிஐசிடியின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் பாரத மொழிகளின் குழுவின் வழிகாட்டுதலின்படி எதிர்வரும் காசித் தமிழ்ச் சங்கமம் 3.0-இன் மையப் பொருண்மையாக அகத்திய மாமுனிவர் உள்ளார். இவரது பங்களிப்பை எடுத்துரைக்கும் விதமாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டியை நடத்த உள்ளது.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் தேசிய சித்த மருத்துவ நாளாகக் கொண்டாடப்படுகிறது. இத்தகைய பெருமைக்குரிய அகத்திய மாமுனிவரின் பங்களிப்புக் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே அவசியமாகிறது. இதை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இந்தக் கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது. இதில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலானப் பள்ளி மாணவர்களுக்கு ‘அருந்தமிழ் கண்ட அகத்தியர்’ எனும் தலைப்பில் அளிக்கப்படுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் கல்லூரி, பல்கலைகழகங்களின் மாணவர்களுக்காக, ‘அகத்தியர் காட்டும் அறிவியல்’ எனும் தலைப்பில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இக்கட்டுரைப் போட்டியின் விதிமுறைகள்

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை 5 பக்கத்துக்கு மிகாமலும், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரை 8 பக்கங்களுக்கு மிகாமலும் அமைய வேண்டும். தமிழ் மொழியில் மட்டுமே கட்டுரை அமையப்பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு செய்யாமல் கையெழுத்துப் படியாக அனுப்பிவைக்க வேண்டும்.

கட்டுரையினைப் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர், துறைத்தலைவர், நிறுவன இயக்குநர் ஒப்புதலுடன் அனுப்பிவைக்கப்பட வேண்டும். உரிய முறையில் வரப்பெறாத கட்டுரை ஏற்கப்பட மாட்டாது. ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.30,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 அளிக்கப்பட உள்ளன. கட்டுரை வந்துசேர வேண்டிய இறுதிநாள் பிப்.5 ஆகும். எக்காரணத்தைக் கொண்டும் போட்டிகள் தொடர்பாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நேரில் வரவோ, தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளவோ கூடாது.

கட்டுரையினை, பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை – 600 100 என்ற முகவரிக்கு அஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்க வேண்டும். கட்டுரைக்கான தரவுகளை https://cict.in/cict2023/kts/ என்னும் வலைப்பதிவில் பார்வையிடலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் 10 நாட்கள் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தில் 4,000 பேர் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்து அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்கான பதிவை சென்னை ஐஐடி சார்பிலான kasitamil.iit.m.ac.in எனும் இணையதளத்தில் பிப்ரவரி 1-ம் தேதி வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement