3-வது திருமணத்திற்கு ரெடியான அன்னபூரணி..!! மாப்பிள்ளை யார் தெரியுமா..? அவரே வெளியிட்ட பதிவு..!!
தன்னை சாமி என்று கூறி, தமிழகத்தை கலகலக்க வைத்த அன்னபூரணி, தற்போது மூன்றாவது திருமணம் செய்யவுள்ளார். இதற்கான தேதியை பேஸ்புக்கில் அறிவித்து மாப்பிள்ளையை அறிமுகம் செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர் தன்னை ஆதிபராசக்தி அம்மன் அவதாரம் எனக்கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.
பின்னர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பில் ஆசிரமம் அமைத்து செயல்பட்டு வருகிறார். ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரில் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், அன்னபூரணி தனது பேஸ்புக் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 3-வது திருமணம் செய்ய உள்ளது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28ஆம் தேதி நான், என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன். அன்றைய தினத்தில் விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கிச் செல்லவும். என்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உங்கள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து, நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்க செய்து உங்கள் குடும்பத்துடன் கொண்டாட வைப்பதற்கு அளப்பறிய சக்தியுடனும் அளப்பறிய அருளுடனும் உங்களுக்காக வீற்றிருக்கும் உங்கள் அன்பு அன்னை.
மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருக்கிறேன். இனி என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை சேவையாகதான் செய்வேன். சத்தியத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன் என்று கூறியுள்ளார். அன்னபூரணிக்கு இந்த திருமணம் நடந்தால் அது 3வது திருமணமாகும். ஏனென்றால் அவர் இதற்கு முன்பு 2 திருமணங்கள் செய்துள்ளார். முதல் திருமணத்தின்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறகு கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு அவர் பிரிந்தார். பிறகு 2வதாக அரசு என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
காதல் கணவர் அரசு இறந்த பிறகு அன்னபூரணி 'அன்னபூரணி அரசு அம்மன்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது தான் தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என கூறி சர்ச்சையில் சிக்கினார். தற்போது ரோகித் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக அன்னபூரணி அறிவித்துள்ளதால், அது அவரது 3-வது திருமணமாகும்.
Read More : ரூ.30,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..? அக்.31ஆம் தேதியே கடைசி..!! உடனே முந்துங்கள்..!!