அண்ணாமலையின் ஆட்டம் ஓவர்..!! தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்..? வெளியான பரபரப்பு தகவல்..!!
அண்ணாமலை அரசியல் படிப்புக்காக லண்டன் சென்று அங்கு 6 மாதங்கள் தங்கவுள்ளார். இதனால், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். இதற்காக, 6 மாதங்கள் அண்ணாமலை லண்டனில் தங்குகிறார். இதனால், தமிழ்நாட்டில் பாஜக தொய்வடையலாம் என்று கருதுகின்றனர். முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார். அவர்கள் சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
இதனால், தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் தமிழிசையாக இருக்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. மற்றொரு புறம், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அந்த கருத்தை மறுத்து வருகின்றனர். இதற்கு முன்னதாகவும், அண்ணாமலை 3 மாதம் லண்டன் சென்றிருந்தார். அப்போது கூட புதிய தலைவர் நியமனம் செய்யப்படவில்லை என்றனர். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், கட்சி மேலிடத்தையும் யோசிக்க வைத்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
Read More : விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! இனி நோ கவலை… புதிய இணையதளத்தை உருவாக்கிய மத்திய அமைச்சர்…!