முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Annamalai | விஜயதரணியின் வருகை தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும்..!! குஷியில் அண்ணாமலை..!!

05:13 PM Feb 24, 2024 IST | 1newsnationuser6
Advertisement

விஜயதரணியின் வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார். பிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு தேவை என்பதால் அவரது தலைமையை ஏற்று பாஜகவை மேலும் வலுப்படுத்த கட்சியில் இணைந்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று விஜயதரணி தெரிவித்தார்.

இந்நிலையில், விஜயதரணியின் வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி விஜயதரணி, பிரதமர் மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில இணை பொறுப்பாளர்சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். சகோதரி விஜயதரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும்” என்று கூறியுள்ளார்.

Read More : Lok Sabha | தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்..? தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தகவல்..!!

Advertisement
Next Article