For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Annamalai | ”டாய்லெட் பேப்பராக திமுகவின் தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள்”..!! வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!!

07:24 AM Mar 23, 2024 IST | 1newsnationuser6
annamalai   ”டாய்லெட் பேப்பராக திமுகவின் தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள்”     வெளுத்து வாங்கிய அண்ணாமலை
Advertisement

திமுகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர் என கோவை பாஜக வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”திமுகவுக்கு தேர்தல் வருவதும் தேர்தல் அறிக்கை கொடுப்பதும், தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை எல்லாம் செய்யாமல் விடுவதும். அதன் பிறகு அடுத்த தேர்தல் வந்ததும் அதே அறிக்கையில் சில மாற்றங்களை செய்வது வாடிக்கைதான். அதாவது முன்பு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கிறோம் என போட்டிருந்தால், இப்போது ரூ.500 என போடுவோம். பெட்ரோல் விலையை ரூ.5 குறைப்பதாக சொல்லியிருந்ததை, இப்போது ரூ.30 குறைப்பதாக போடுவோம். 2026இல் நடக்கும் தேர்தலின்போது, பெட்ரோலை இலவசமாக கொடுப்போம் என்பார்கள்.

வீட்டில் ஹோஸ் போட்டு கொடுத்து விடுவோம், அப்படியே ஹோஸை எடுத்து வண்டியில் நுழைத்தால் போதும் என்பார்கள். உங்கள் வீட்டில் டாய்லெட் பேப்பர் இல்லாவிட்டால் திமுக தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள். பொட்டலம் கட்டுவதற்கும் இதை பயன்படுத்தலாம். 2019ஆம் ஆண்டு 295 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தோம். அதையெல்லாம் நிறைவேற்றிவிட்டு 2024 தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். 2024 தேர்தல் அறிக்கையில் உள்ளதையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என மக்களுக்கு தெரியும். எனக்கும் வேட்பாளருக்கும் ஒரு சண்டையும் இல்லை. என் சண்டை அறிவாலயத்துடன், கோபாலபுரத்துடன்! ஆதிக்க சக்திகள் வளர்ச்சியை தடுத்திருக்கிறார்களோ அவர்களோடு!

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் சண்டை, தமிழகத்தின் அரசியலை அடியோடு மாற்றிக் காட்டுவதற்கான சண்டை, நிஜ வளர்ச்சி என்றால், என்னவென காட்டக் கூடிய தேர்தலுக்காகவும் சண்டை. எனவே, மற்ற வேட்பாளர்கள் என்னவேணாலும் சொல்லட்டும், எல்லோர் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது. கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு எல்லா அமைச்சர்களும் வந்து நூற்று கோடிக்கணக்கான பணத்தை எல்லாம் செலவு செய்வார்கள். நான் மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன். மக்களை நம்பி, கோவையிலிருந்து மாற்றத்தை தொடங்க வேண்டும் என நம்பி போட்டியிடுகிறேன்.

நீங்கள் பூதக்கண்ணாடி போட்டு பார்த்தாலும் நான் எந்த காசையும் செலவு செய்ய மாட்டேன். தமிழகத்திலேயே செலவு குறைந்த தேர்தலாக கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் இருக்க வேண்டும் என்ற சங்கல்பத்துடன் வேட்பாளராக வந்துள்ளேன். தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற ஒரு தேர்தல் செலவு இல்லாமல் நடத்த வேண்டும். அடுத்த 40 நாட்களும் பாஜகவை கவனியுங்கள். நாங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறோமா என பாருங்கள். 33 மாதங்களாக எதிர்க்கட்சியினர் சம்பாதித்த பணத்தை எல்லாம் இறக்குங்கள். முதல்வரே வந்து முகாம் அடித்தாலும் இங்கு ஒன்றும் நடக்காது. தமிழ்நாட்டில் இருந்து ஒரு மாற்றத்தை கோவையிலிருந்து மக்கள் ஜூன் 4ஆம் தேதி அன்று ஆரம்பிப்பார்கள். அடுத்த 2 ஆண்டுகளில் கோவையில் ஏற்பட்ட மாற்றத்தை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்வேன்“ என்று தெரிவித்தார்.

Read More : பாமக வேட்பாளராக அன்புமணியின் மனைவி சௌமியா அறிவிப்பு..!! எங்கு போட்டியிடுகிறார்..?

Advertisement