Annamalai | 'இந்த வேட்பாளர்களுக்கே முன்னுரிமை'..!! டெல்லி செல்லும் முன் ட்விஸ்ட் வைத்து சென்ற அண்ணாமலை..!!
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியலை டெல்லி தலைமையிடம் சமர்ப்பிப்பதற்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “தமிழக வேட்பாளர்கள் குறித்து டெல்லியில் உள்ள பாராளுமன்ற தேர்தல் குழு முடிவெடுப்பார்கள். நாங்கள் 39 தொகுதிகளிலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியலை வழங்க சென்று கொண்டிருக்கிறோம்.
கீழே தொண்டர்கள் சொல்வதை மேலே கொண்டு செல்வது தான் எங்களுடைய வேலை. 39 தொகுதிகளுக்கும் பாஜக தலைவர்கள் சென்று தொண்டர்களின் விருப்பத்தை கேட்டு அவர்களின் விருப்பத்தை பெற்றுள்ளனர். ஒரு தொகுதியில் 63 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 43 பேரை முன்மொழிந்து உள்ளனர். மத்திய சென்னையில் 34 பேரை முன்மொழிந்துள்ளனர். சேலத்தில் 51 பேரை முன்மொழிந்துள்ளனர்.
இதுபோன்ற தொகுதிகளில் அதிகமான வேட்பாளர்களின் பெயர்கள் பாஜக தொண்டர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று பாஜக தொண்டர்கள் அவர்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளனர். இதை அனைத்தையும் அகில இந்திய தலைமையிடம் கொடுப்பதுதான் எங்களுடைய கடமை. ஒரு மாநிலத் தலைவராக வேட்பாளரின் பெயர்களை குறிப்புகள் விரும்பவில்லை. வேட்பாளர்கள் பெயரை மத்திய தலைமையிடம் வைக்கிறோம் அவர்கள் முடிவெடுப்பார்கள்.
பெண் வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்துள்ளோம். 39 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை கட்சித் தொண்டர்கள் முன்மொழிந்து உள்ளனர். எனவே, பெண் வேட்பாளருக்கு அதிக வாய்ப்பு வழங்க கட்சி முன்வரும் என எதிர்பார்க்கிறோம். அதனை மேலிட தலைமை முடிவெடுக்கும்" என தெரிவித்தவாறு டெல்லி புறப்பட்டுச் சென்றார் அண்ணாமலை.
Read More : DMK கூட்டணியில் இருந்து விலகல்..!! அதிமுகவில் இணைந்தது ஃபார்வட் பிளாக் கட்சி..!! தேனியில் போட்டி..?