Annamalai : கோவை தொகுதியில் தாமரை மலருமா.? தபால் வாக்கு எண்ணிக்கையில் அண்ணாமலை-க்கு பின்னடைவு!!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்தது.இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.கோயம்புத்தூர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு அந்த தொகுதியின் விவரங்களை காணலாம்.
கோயம்புத்தூர் தொகுதியில், மொத்த வாக்களார்களின் எண்ணிக்கை 20,83,034 ஆகும். அதில், ஆண் வாக்காளர்கள் - 10,30,063 பேரும், பெண் வாக்காளர்கள் - 10,52,602 பேரும், இதர வாக்காளர்கள் - 369 பேரும் உள்ளனர். கோவையில், தி.மு.க. கூட்டணியில், கணபதி ராஜ்குமாரும், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமசந்திரனும், பாஜக சார்பில் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதனும் தேர்தலில் களம் கண்டனர்.
தபால் வாக்கு எண்ணப்பட்டு வரும் சூழலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதியில் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக கூட்டணியில் போட்டி இட்ட கணபதி ராஜ்குமார் அந்த தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் பிறந்த நாள் பரிசாக அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டுமா என அவரது தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.