"பார்த்து பேசுங்க தம்பி.." "பொதுச் செயலாளர் வார்த்தைக்கு அமைதி காக்கிறோம்" - அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை.!
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே வேளையில் கட்சிகளுக்கிடையே நடைபெறும் மோதலும் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. கடந்த தேர்தல்களில் ஒரே அணியில் பயணித்த அதிமுக மற்றும் பாஜக இந்த முறை எதிரணிகளாக களத்தில் மோதுகின்றன .
பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டதாக அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இனி பாஜக உடனான கூட்டணி கிடையாது என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் அமித்ஷா கூட்டணிக்கான கதவு திறந்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலையும் கூட்டணி பற்றிய விவரங்கள் தேர்தல் நெருங்கும் போது தான் முடிவாகும் என்று கூறியிருந்தார் .
இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அமித்ஷா கூறியதை நான் பார்க்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்து பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.பி உதயகுமார் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கான காரணம் பற்றி பேட்டியளித்திருக்கிறார். மேலும் அதிமுக காணாமல் போய்விடும் என்று அண்ணாமலை கூறிய கருத்திற்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் " அண்ணா மற்றும் அம்மாவைப் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதை தன்மானம் உள்ள எந்த தொண்டனும் விரும்ப மாட்டான் என தெரிவித்திருக்கிறார். அண்ணாமலை அதிமுக தலைவர்களை பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது கூட்டணி முடிவதற்கான முக்கிய காரணம் எனக் கூறினார் . மேலும் இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட மிகப்பெரிய சக்தியான அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது" என தெரிவித்திருக்கிறார்.
கூலிக்கு ஆட்கள் வைத்துக் கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதால் பெரிய தலைவர் ஆகிவிட முடியாது எனவும் அண்ணாமலையை விமர்சித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூட்டணி தொடர்பாக லேகியம் விற்பனை செய்பவர்கள் போல் பேசி வருவதாகவும் கடுமையாக சாதி இருக்கிறார். அண்ணாமலைக்கு வாய அடக்கம் தேவை என்றும் 'பார்த்து பேசுங்க தம்பி' என்ன எச்சரிக்கை எடுத்துள்ளார். லேகியம் விற்பனை செய்வதெல்லாம் டெல்லியுடன் நிறுத்திக் கொண்டால் நல்லது எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
எப்போதும் பொடி வைத்து பேசும் அண்ணாமலையிடம் மோடி எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றும் தெரிவித்த ஆர்.பி உதயகுமார் வார்டு கவுன்சிலராக கூட ஜெயிக்காத அண்ணாமலைக்கு அரசியலைப் பற்றி என்ன தெரியும்.? என கேள்வி எழுப்பி உள்ளார். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இரண்டு கோடி தொண்டர்களும் அமைதி காப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர்.