For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Annamalai | ’களத்துல எதிர்க்க பயம்’..!! ’சுப்ரீம் கோர்டே சொல்லிருச்சு’..!! ’ஒன்னும் பண்ண முடியாது’..!! அண்ணாமலை சரவெடி..!!

08:21 AM Mar 29, 2024 IST | Chella
annamalai   ’களத்துல எதிர்க்க பயம்’     ’சுப்ரீம் கோர்டே சொல்லிருச்சு’     ’ஒன்னும் பண்ண முடியாது’     அண்ணாமலை சரவெடி
Advertisement

கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க நேரடியாக முடியவில்லை என எப்போதும் வழக்கமாக செய்யும் டிராமாமை வேட்பு மனுவிற்கு கொண்டு வந்துள்ளனர். எப்போதும் இரண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வது அரசியல் கட்சிகளின் முறையாக வைத்துள்ளோம்.

Advertisement

சீரியல் நம்பர் 15, 27 ஆகிய இரண்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்று இந்திய நீதித்துறை முத்திரைத்தாளிலும், இன்னொன்று நீதித்துறை சாராத முத்திரைத்தாளிலும் தாக்கல் செய்துள்ளோம். இரண்டு வேட்பு மனுக்கள் பண்ணும் போதும் குழப்பம் இருந்தது. ஒரு தரப்பு வழக்கறிஞர் இப்படி செய்ய வேண்டும், இன்னொரு தரப்பு வழக்கறிஞர் அப்படி செய்ய வேண்டும் என்றதால், இரண்டு விதமாகவும் வேட்பு மனுதாக்கல் செய்தோம். தேர்தல் நடத்தும் அதிகாரி ஒரு வேட்பு மனுவை தள்ளுபடி செய்து, இன்னொரு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது ஒரு பெரிய விஷயம் அல்ல. எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல், வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள். இது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. உச்சபட்சமாக இந்த முறை வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என மாநில தேர்தல் அதிகாரியே விளக்கம் அளிக்கும் நிலை வந்துள்ளது. எனது வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவை நிராகரிக்க இது காரணங்கள் அல்ல. நிராகரிக்க வேண்டுமென பொய்யான செய்திகளை சொல்கிறார்கள். பொய்யான செய்திகளை சொன்னால் தான் வேட்பு மனுவை நிராகரிக்க முடியும். இது போட்டி தேர்வு அல்ல. கையெழுத்தில்லை, தேதி போடவில்லை என நிராகரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் சொல்லியுள்ளது. இதற்கு மேல் விவரங்கள் வேண்டுமெனின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேளுங்கள்' எனத் தெரிவித்தார்.

Read More : Savings | உங்கள் மகளின் திருமணத்திற்காக வெறும் ரூ.121 முதலீடு செய்து ரூ.27 லட்சம் பெறலாம்..!! எப்படி தெரியுமா..?

Advertisement