சொன்னதை செய்தார் அண்ணாமலை..!! சாட்டையை சுழற்றி தன்னைத்தானே அடித்துக் கொண்ட பரபரப்பு வீடியோ..!!
கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியானது? அதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரம் வெளியே விட என்ன காரணம்.. காவல் துறையை தவிர வேறு யார் அந்த தகவல் வெளியில் விட முடியும். குற்றம் செய்த அயோக்கியனை விட்டுவிட்டு, பெண்ணை குற்றவாளி போல் முதல் தகவல் அறிக்கையில் காட்டிருக்காங்க. ரகசியமாக பெண் காதலனை சந்தித்து முத்தம் கொடுத்ததாக FIRஇல் குறிப்பிட்டு, அதையும் இணையத்தில் பதிவிட்டுருக்காங்க.. வெக்கமா இல்லையா..?
காக்கி சட்டையை போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே வெட்கமாகவில்லையா? திமுக அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும். மரியாதை கொடுத்து பேசி வருகிறேன். வீதிக்கு வந்து பேசினால் வேறு மாதிரி பேசுவேன். அந்த FIRயை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. எத்தனை நாட்களுக்கு இந்த நாடகத்தை தமிழ்நாட்டில் நடத்துவீர்கள். நாம் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும். பத்து நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 15 ஆவது நாளில் வழக்கல் முடித்து தண்டனை பெற்றுக் கொடுங்கள்.
அரசியலில் இருப்பதால் அடங்கி இருக்கிறேன். இனி சித்தாந்தம், வடக்கு தெற்கு என்ற எந்த எலவையும் பேச போறது இல்லை.. இந்த அரசியல் இனி ஆகாது. எத்தனை ஆர்ப்பாட்டம் செய்வது. அதனால் கட்சியின் தொண்டராக மாநில தலைவராக ஒரு சங்கல்பம் எடுத்திருக்கிறேன். இனிமேல் வேறுமாதிரி தான் உங்களை டீல் பண்ண போகிறோம். நாளை எனக்கு நானே சாட்டையடி கொடுக்கக் கூடிய நிகழ்வை காலை 10 மணிக்கு எனது வீட்டுக்கு வெளியே நடத்தப் போகிறேன்” என்று கூறியிருந்தார்.
அந்த வகையில், இன்று திமுக அரசை கண்டித்து, கோவையில் உள்ள தன்னுடைய இல்லத்தின் முன்பு, தனக்குதானே சாட்டையால் அடித்துக் கொண்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. பச்சை வேட்டி அணிந்து, சட்டை இல்லாமல், 6 முறைக்கு மேல் சாட்டையால் தன்னைத் தானே அடித்து கொண்டார்.