For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ’பிஞ்சு போன செருப்பு’ என விமர்சித்த அண்ணாமலை..!! வலுக்கும் கண்டனங்கள்..!!

01:40 PM Mar 30, 2024 IST | Chella
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ’பிஞ்சு போன செருப்பு’ என விமர்சித்த அண்ணாமலை     வலுக்கும் கண்டனங்கள்
Advertisement

பிஞ்சு போன செருப்பு என இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதாக அண்ணாமலைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Advertisement

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து நேற்று அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "மத்தியில் மீண்டும் நமது நரேந்திர மோடி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, 3-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. பாஜக ஆட்சிக்கு வரும்போது நாட்டின் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்தது. இப்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 33 மாதங்களில் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த கடன் ரூ.8.53 லட்சம் கோடி. நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான். தமிழ்நாட்டுக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். 45 லட்சம் விவசாயிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு ரூ.400 மானியம் தரப்படுவதால் 40 லட்சம் பேர் பயனடைகின்றனர். பயனாளியின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாகப் பணம் செலுத்திவிடுவதால் இவர்களால் கமிஷன் அடிக்க முடியவில்லை.

திமுக தற்போது நடப்பது கவுன்சிலர் தேர்தல் என்பது போல் பிரச்சாரம் செய்கிறது. அதிமுக மாநில சட்டசபை தேர்தல் போல் பிரச்சாரம் செய்கிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்யவில்லை. திமுக கடந்த முறை வெற்றி பெற்றதால் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு மனைவியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 350% சொத்து உயர்ந்துள்ளது. திமுக வென்றால் திமுகவினரின் சொத்து மதிப்பு தான் உயருமே தவிர மக்களின் வாழ்வாதாரம் உயராது" என பேசினார்.

மேலும் பேசிய அண்ணாமலை, "1980ல் பேசிய அதே விஷயத்தை சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கும் பேசுகிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு என பேசிக் கொண்டிருக்கிறது திமுக. இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை" எனக் கூறினார் அண்ணாமலை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்சு போன செருப்பு எனக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசியுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. அண்ணாமலை தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

Read More : மழை வெள்ளத்தின்போது திமுக அரசு வழங்கிய 6000 ரூபாயில், 5400 மத்திய அரசு கொடுத்தது..!! அண்ணாமலை ஒரே போடு..!!

Advertisement