For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பத்திரிகையாளர்கள் போராட்டம்...! உங்களை யாருமே மதிக்க மாட்டாங்க...! அண்ணாமலை ஆவேசம்

06:14 AM Jan 26, 2024 IST | 1newsnationuser2
பத்திரிகையாளர்கள் போராட்டம்      உங்களை யாருமே மதிக்க மாட்டாங்க     அண்ணாமலை ஆவேசம்
Advertisement

செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு, இன்று தமிழகத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லை என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

புவனகிரி சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; சனாதன எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு என்று யாராவது ஒரு கூட்டம் போட்டால் அழைப்பு கூட இல்லாமல் அண்ணன் திருமாவளவன் கலந்துகொள்வார். போலி சமூக நீதி பேசிக் கொண்டு, திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு தொடர்ந்து நடக்கும் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். வேங்க்கைவயல் சம்பவத்திலும், திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் வீட்டில் வேலை செய்த பட்டியல் சமூக இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவத்திலும், திருமாவளவன் திமுக அரசைக் கண்டிக்கக் கூட முன்வரவில்லை. தன்னை நம்பும் ஒரு பெரும் சமுதாயத்தைத் திமுகவிடம் அடகு வைக்க நினைக்கிறார்.

Advertisement

ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வன்று தமிழக அரசு பூஜை, அன்னதானம், பஜனை மற்றும் ஒளிபரப்பு ஆகிய அனைத்தையும் தடை செய்துள்ளது என்ற உண்மையை சொன்னதற்கு தினமலர் பத்திரிகை மீது மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தான் நீதிமன்றத்திற்குச் சென்று நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி பெற்றது. அதையே திமுக மறைக்கப் பார்க்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 பத்திரிகையாளர் நேச பிரபு அவர்கள் காவல்துறையினரின் மெத்தனத்தால் மர்மநபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மணல் கொள்ளை, கள்ள சாராயம் போன்ற செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு, இன்று தமிழகத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லை.

ஆனால் இதற்கெல்லாம் போராட்டம் நடத்தாத பத்திரிகையாளர்கள், எனக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். திமுகவின் செய்தி தொடர்பாளர்கள், திமுகவின் பரப்புரையாளர்கள் போல் செயல்படும் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட சில பத்திரிகையாளர்களை யாரும் மதிக்கமாட்டார்கள். ஒரு மாடல் மட்டும் தியேட்டரில் பிரதமர் மோடிக்கும், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி நடத்தும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல். நமது பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை தமிழகமும் துணை நிற்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என‌ கூறினார்.

Tags :
Advertisement