பரபரப்பு...! அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு... தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு...!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் FIR கசிவுக்காக காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காவல்துறை காரணமில்லை.. மத்திய அரசின் NIC நிர்வாக குறைபாடே காரணம் என தமிழக தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி டிச.23ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ராஜா அண்ணாமலைபுரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை எப்படி கசிந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். அதற்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளித்துள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எப்.ஐ.ஆர் (FIR) எப்படி கசிந்தது? ஒரே குற்றவாளி என ஆணையர் எந்த அடிப்படையில் தெரிவித்தார்? என நீதிமன்றத்தில் விளக்க தாயாராக இருக்கிறோம் என தமிழக அரசு சார்பில் தெரிக்கப்பட்டது. மேலும், புகார்கள் பதிவு செய்யப்பட்டதும் எப்.ஐ.ஆர் தன்னிச்சையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த வழக்கில் எப்படி எப்.ஐ.ஆர் கசிந்தது என சைபர் கிரைம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் ஒரே ஒரு நபர் தான் குற்றவாளி காவல்துறை ஆணையர் எப்படி கூறலாம் என கேள்வி எழுப்பியதுடன், அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் FIR கசிவுக்காக காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காவல்துறை காரணமில்லை.. மத்திய அரசின் NIC நிர்வாக குறைபாடே காரணம் என தமிழக தெரிவித்துள்ளது.