ஆனி மாத பௌர்ணமி..!! திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது தெரியுமா..? இவ்வளவு சிறப்பா..?
பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கி வருவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம். இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பிற பகுதிகள், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வது வழக்கம்.
சாதாரண நாட்களில் கூட கிரிவலம் செல்லலாம் என்றாலும், பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் ’வேண்டும் வரம் பெறலாம்’ என்பது ஐதீகம். இதனால் மற்ற நாட்களைவிட பௌர்ணமி நாளில் ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக, கார்த்திகை தீபத்திருவிழா மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பௌர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இன்று வேண்டிய வரம் அருளும் ஆனி மாத பௌர்ணமி. இந்த நாளில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் ஜூன் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:46 மணி முதல் நாளை ஜூன் 22ஆம் தேதி சனிக்கிழமை காலை 7.21 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக தெரிவிக்கப்படுகிறது. நாளை காலை வரை பௌர்ணமி நீடிப்பதால் நாள் முழுவதும், இன்று இரவு பௌர்ணமி கிரிவலம் செல்லலாம்.
Read More : விஜய்யின் காலில் விழ சொன்ன தவெக நிர்வாகி..!! தீயாய் பரவும் வீடியோ..!! உண்மை என்ன..?