For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Angel Tax | ரத்து செய்யப்பட்ட ஏஞ்சல் வரி..!! அப்படினா என்ன தெரியுமா..? தெரிஞ்சிக்கோங்க..!!

This is the tax levied on innovative companies called start-up companies.
09:57 AM Jul 24, 2024 IST | Chella
angel tax   ரத்து செய்யப்பட்ட ஏஞ்சல் வரி     அப்படினா என்ன தெரியுமா    தெரிஞ்சிக்கோங்க
Advertisement

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எனப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிதான் இது. புத்தாக்க நிறுவனங்கள், அதன் சந்தை மதிப்பை விட அதிகமான முதலீடுகளை ஈர்த்தால், ஏஞ்சல் வரி விதிக்கப்பட்டு வந்தது. முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகள் விற்பனை மூலம் நிதி கோரும் தனியார் புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள், வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது.

Advertisement

அதாவது, முதலீட்டாளர்களிடம் பங்கு விற்பனை மூலம் திரட்டப்படும் தொகை, நியாய விலையை விட அதிகமாக இருந்தால், அதிகப்படியான தொகைக்கு வரி விதிக்கப்பட்டது. பிற ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம் என்ற வகையில், வருமானவரிச் சட்டத்தின் 56ஆம் பிரிவு 2ன் கீழ் 30.9 விழுக்காடு வரிவிதிக்கப்பட்டது.

இந்த வரிக்கு, ஏஞ்சல் வரி என்று பெயர். தற்போது மத்திய பட்ஜெட்டில், ஏஞ்சல் வரி, முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 2012 முதல் அமலில் இருந்த ஏஞ்சல் வரி, முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதன் மூலம் புத்தாக்க நிறுவனத்தினர் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஏஞ்சல் வரி விலக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சீர்திருத்தம் என்று புத்தாக்க நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Read More : திருமணமான மூன்றே நிமிடத்தில் விவகாரத்து..!! மணப்பெண்ணை அதிரவைத்த மாப்பிள்ளை..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement