For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாலில் மயக்க மருந்து..!! ஆன்லைன் ஆள் தேடிய கணவர்..!! இதுவரை 72 பேர் 92 முறை பலாத்காரம்..!! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா..?

It was revealed that Giselle had been raped 92 times by 72 people, of which only 51 had been identified.
04:44 PM Dec 20, 2024 IST | Chella
பாலில் மயக்க மருந்து     ஆன்லைன் ஆள் தேடிய கணவர்     இதுவரை 72 பேர் 92 முறை பலாத்காரம்     நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா
Advertisement

பிரான்சை சேர்ந்தவர் 71 வயது டொமினிகியூ. இவரது மனைவி கிசெல் (72). டொமினிகியூ தன்னுடைய மனைவிக்கு பாலில் தினமும் தூக்க மாத்திரை கலந்து கொடுப்பாராம். பிறகு போதை மாத்திரைகளை அந்த பாலிலேயே மனைவிக்கு கலந்து கொடுப்பாராம். இறுதியில் கிசெல் மயக்கமாகி விழுந்ததும், அவரை பலாத்காரம் செய்வதற்கு ஆட்களை ரூமுக்குள் அனுப்பி வைப்பாராம் கணவர் டொமினிகியூ. இதற்காகவே ஆட்களை ஆன்லைனில் தேர்வு செய்து மனைவியை பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.

Advertisement

கடந்த 10 ஆண்டுகளாக இந்த செயலில் கணவர் ஈடுபட்டு வந்துள்ளார். வயதானவர் என்பதாலும், கிசெல்லுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும் இவர் மீது யாருக்குமே சந்தேகம் வரவில்லை. ஒருநாள் டொமினிகியூ ஷாப்பிங் சென்டர் போனபோது, அங்குவந்த இளம்பெண்ணை ரகசியமாக கேமராவில் வீடியோ எடுத்துள்ளார். அப்போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இவரது போனை வாங்கி பார்த்த போலீசாருக்கு தலையே சுற்றிவிட்டது.

அதில், ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. அவரது லேப்டாப், கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்தபோது, அதில், தன்னுடைய மனைவியை பல பேர் பலாத்காரம் செய்யும் வீடியோ, புகைப்படங்கள் இருப்பது தெரியவந்தது. டொமினிகியூ - கிசெல் தம்பதிக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 10 ஆண்டுகளாகவே மனைவியை பலாத்காரம் செய்வதற்காக, 26 வயது முதல் 74 வயதுள்ளவர்களை ஆன்லைனில் நபர்களை தேர்ந்தெடுத்து வந்துள்ளார்.

மனைவி ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கும்போது, பலாத்காரம் செய்வதற்காக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு போன் செய்து வரவழைப்பாராம் டொமினிகியூ. இதுபோல, கிசெல்லை இதுவரை 72 பேர் 92 முறை பலாத்காரம் செய்திருப்பதாகவும், இதில் 51 நபர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இந்த வழக்கில் டொமினிகியூவுக்கு தீர்ப்பு தரப்பட்டுள்ளது. அதில், 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. கிசெல்லை சீரழித்த 51 நபர்களுக்கும், 5 முதல் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Read More : கருவளர்ச்சிக்கு சூப்பர் ரிசல்ட் கொடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு..!! வாரம் ஒருமுறை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?

Tags :
Advertisement