For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காதலிக்க மறுத்த சிறுமிக்கு மயக்க மருந்து..!! முட்புதருக்குள் இழுத்துச் சென்று உடலை கிழித்த கொடூரம்..!!

A boy has been harassing the girl while she is going to school by asking her to make love to him.
04:02 PM Nov 06, 2024 IST | Chella
காதலிக்க மறுத்த சிறுமிக்கு மயக்க மருந்து     முட்புதருக்குள் இழுத்துச் சென்று உடலை கிழித்த கொடூரம்
Advertisement

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர், அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை இவர், வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார். ஆனால், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகள் குறித்து கேட்க பள்ளிக்கு சென்றனர்.

Advertisement

வழியில் கிராமத்தின் அருகே முட்புதரில் சிறுமியின் முனகல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது தங்களது மகள்தான் என தெரிந்தது. அப்போது, சிறுமி உடலில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சிறுமி திருப்பதி மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், போலீசார் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமி பள்ளிக்கு செல்லும்போது தன்னை காதலிக்கும்படி கூறி ஒரு வாலிபர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை ஏற்க சிறுமி மறுத்துள்ளார். தொடர்ந்து, டார்ச்சர் செய்ததால் ஆத்திரமடைந்த சிறுமி, அந்த வாலிபரை தாக்கியுள்ளார்.

இதனால் அந்த வாலிபர், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை கடத்திச் சென்று மறைவான இடத்தில் வலுக்கட்டாயமாக மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்துள்ளனர். பின்னர், அவர் மயங்கியதும் அவரை பிளேடால் உடல் முழுவதும் கிழித்துள்ளனர். இதனால் சிறுமி மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். பின்னர் முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் நேற்று வாலிபர்கள் சிலரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Read More : அரசு ஊழியர்கள் மீது வழக்கா..? இனி அனுமதி பெற வேண்டும்..!! உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு..!!

Tags :
Advertisement