Andrea | 11 வயதில் தந்தையுடன் பேருந்தில் பயணம்..!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா..!!
தன் தந்தையுடன் 11 வயதில் பேருந்தில் பயணம் செய்த போது ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை நடிகை ஆண்ட்ரியா பகிர்ந்துள்ளார்.
சென்னையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் 1985ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா. தனது 10 வயதிலேயே இசைக்குழுவில் பாட ஆரம்பித்தார். பின்னர், அவருக்குத் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2005ஆம் ஆண்டு 'கண்ட நாள் முதல்' என்ற படத்தில் ஒரு கேமியோ ரோல் செய்யும் வாய்ப்பு ஆண்ட்ரியாவுக்கு கிடைத்தது.
பின்னர், 2006ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமாலினி முகர்ஜிக்கு பின்னணி குரல் கொடுத்தார். 2007ஆம் ஆண்டு சரத்குமாருடன் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக ஆண்ட்ரியாவுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், இவர் தனக்கு சிறுவயதில் நடந்த சம்பவம் குறித்து ஆண்ட்ரியா பேசியுள்ளார்.
அதில், "நானும், எனது தந்தையும் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எனக்கு 11 வயது தான் இருக்கும். ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் தான் அணிந்திருந்தேன். அப்போது திடீரென ஒரு நபரின் கை எனது டி-ஷர்ட் உள்ளே வருவது போல் உணர்ந்தேன். உடனடியாக அங்கிருந்து கொஞ்சம் முன்னாடி வந்து அமர்ந்துவிட்டேன். இந்த சம்பவத்தை தனது தாய், தந்தை இருவரிடமும் நான் கூறவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. நான் ஏன் அதை என் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த விஷயத்தைப் பற்றி எனது தந்தையிடம் சொன்னால் அதற்காக அவர் நடவடிக்கையை எடுத்திருப்பார். அதனால் தான் நான் செய்யவில்லை. ஏனென்றால் நாம் அந்த வகையில் நமது சமூகத்தால் வளர்க்கப்பட்டிருக்கிறோம். இதை பற்றியெல்லாம் நீங்கள் பெரிதாக பேச வேண்டாம் என்று சமூகம் விரும்புகிறது" என்று கூறியுள்ளார்.
Read More : Ice Cream | தொடங்கும் கோடை காலம்..!! ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை அதிரடி உயர்வு..!! நாளை முதல் அமல்..!!