For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாத அன்புமணி..!! கடலூரில் தங்கர் பச்சான்..!! முழு விவரம் இதோ..!!

10:53 AM Mar 22, 2024 IST | 1newsnationuser6
பாமக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாத அன்புமணி     கடலூரில் தங்கர் பச்சான்     முழு விவரம் இதோ
Advertisement

தமிழ்நாட்டில் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வேட்பாளர்கள் விவரம்

திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா, மாநிலப் பொருளாளர், பா.ம.க.

அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,

சேலம் - அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க.
சேலம் தெற்கு மாவட்டம்

ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், மாவட்டச் செயலாளர், பா.ம.க.,

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,

கடலூர் - தங்கர் பச்சான். எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,

மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க

தருமபுரி - அரசாங்கம், பா.ம.க. தருமபுரி கிழக்கு மாவட்டம்

விழுப்புரம் - முரளி சங்கர், மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி

இந்தத் தேர்தலில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் பாமக சார்பில் தேர்தல் அரசியலில் களம் இறங்குகிறார். அழகி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட தமிழின் சிறந்த படைப்புகள் சிலவற்றை இயக்கியிருக்கும் இவர், நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும், அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. 2019 தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டு அன்புமணி தோல்வியடைந்தார். தொடர்ந்து மாநிலங்களவை எம்பியாக உள்ள அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், மீண்டும் அவர் மாநிலங்களை எம்பியாகவே தொடருவார் என தெரிகிறது.

Advertisement