For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆனந்த் அம்பானி-ராதிகாவின் பிரமாண்ட திருமணம்!. நேரில் சென்று மணமக்களை வாழ்த்திய பிரதமர் மோடி!

Anand Ambani-Rathika's grand wedding! Prime Minister Modi greeted the bride and groom in person!
06:48 AM Jul 14, 2024 IST | Kokila
ஆனந்த் அம்பானி ராதிகாவின் பிரமாண்ட திருமணம்   நேரில் சென்று மணமக்களை வாழ்த்திய பிரதமர் மோடி
Advertisement

PM Modi: ஆனந்த் அம்பானி - ராதிகா தம்பதிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி, சுமார் ரூ.9,43,091 கோடி சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11-வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர்.

இதில் ஆனந்த் அம்பானிக்கு ஜூலை 12ஆம் தேதி திருமணம். இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். இந்த Pre Wedding கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில், உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

தற்போது, இந்தியாவின் ஹார்ட் டாப்பிக்காகவே மாறும் அளவிற்கு இவர்களது திருமண கொண்டாட்டங்கள் பேசுபொருளாக உள்ளது. ப்ரீ வெட்டிங், இத்தாலி கொண்டாட்டம் என ஒரு திருமணத்தை ஏதேதோ பெயர் வைத்து கொண்டாடுகின்றனர். நேற்று ஆனந்த் அம்பானி – ராதிகாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் உலகில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்நிலையில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க மஹாராஷ்டிரா வந்துள்ள பிரதமர் மோடி , மும்பையில் நேற்று நடந்த முகேஷ் அம்பானி மகன் திருமண சுப ஆசீர்வாத்'' நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக, பிரதமர் மோடியை வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார் முகேஷ் அம்பானி.

Readmore: அதிர்ச்சி!. கர்நாடகாவில் ஒரே நாளில் , 1,242 பேருக்கு டெங்கு பாதிப்பு!. 10 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு!.

Tags :
Advertisement