முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அப்படி போடு.. நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் ரத்து.. குஷியில் வாகன ஓட்டிகள்..!! தேர்தல் தான் காரணமா?

An urgent announcement has now been made that there is no need to pay toll gate for vehicles entering Mumbai city.
07:36 PM Oct 14, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று டோல்கேட் கட்டணம். இப்படிப்பட்ட சூழலில், இனிமேல் வாகன ஓட்டிகள் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்ற அதிரடியான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை நகருக்குள் நுழையும் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக, தாஹிசார், முலுண்ட், வாஷி, அய்ரோலி மற்றும் தின்ஹாந்த் நாகா ஆகிய 5 இடங்களில் டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 5 டோல்கேட்களிலும் கட்டணம் செலுத்துவதில் இருந்து, இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு தற்போது விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (அக்டோபர் 14) நள்ளிரவு முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. மகாராஷ்டிரா மாநில முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த 5 டோல்கேட்களிலும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணம் 45 ரூபாயாக இருந்தது. இனிமேல் அந்த கட்டணத்தை வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டியதில்லை. இது மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாகவே டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து, இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு தற்போது விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Read more ; திருந்தவே மாட்டிங்களா? கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை..!! அதிரடி காட்டிய போலீஸ்..

Tags :
Eknath ShindeLight Motors VehiclesMaharashtra Electionmumbai citytoll gate
Advertisement
Next Article