முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வங்கி ஆவணங்கள் : செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு!!

An order was passed today in a petition filed by former minister Senthil Balaji seeking production of bank documents in the Unlawful Money Transfer Prohibition Act case.
10:41 AM Jul 08, 2024 IST | Mari Thangam
Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளது.

Advertisement

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், வங்கி ஆவணங்களை கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான ம.கவுதமன், தற்போது வரை தங்களுக்கு வங்கி தொடர்பான விடுபட்ட ஆவணங்களை வழங்கவில்லை என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வங்கி தொடர்பான ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதன்படி, வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளது.

Tags :
Illegal Money Transfer Prohibition Act caseSenthil Balaji
Advertisement
Next Article