For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சொந்தக்காரங்க ரொம்ப அவமான படுத்துனாங்க.. ஒரு மாதம் வீட்ட விட்டு வெளியவே வரல..!! - நெப்போலியன் சம்மந்தி உருக்கம்

An interview given by the parents of Napoleon's niece Akshayya is going viral on the internet.
12:37 PM Nov 14, 2024 IST | Mari Thangam
சொந்தக்காரங்க ரொம்ப அவமான படுத்துனாங்க   ஒரு மாதம் வீட்ட விட்டு வெளியவே வரல       நெப்போலியன் சம்மந்தி உருக்கம்
Advertisement

தமிழ் சினிமாவில் அதிரடி நாயகனாகவும், வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான நெப்போலியன், தன்னுடைய மகன் தனுஷுக்கு வெகு விமர்சியாக திருமணம் செய்து வைத்த நிலையில், இது தான் கடந்த ஒரு வாரமாக தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. நெப்போலியனின் மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் நடந்தது குறித்து பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதே நேரம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் அழித்து விட்டார் என்று எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்தனர்.

Advertisement

இந்த நிலையில் நெப்போலியன் மகன் திருமணம் செய்திருக்கும் அக்ஷயாவின் பெற்றோர் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகிறது. அதில் அக்ஷயாவின் அம்மா பேசுகையில், எங்களுடைய குடும்பம் பல வருடங்களாக திருச்சியில் தான் வசித்து வந்தோம். அங்கு சின்னதாக கடை நடத்திக் கொண்டிருந்தோம். அந்த பகுதியில் தான் நெப்போலியனின் மாமனார் குடும்பமும் இருந்தது. நெப்போலியனின் மாமனார் எங்களுக்கு நல்ல பழக்கம் உள்ளவர். அதனால் அவர் எங்கள் வீட்டில் சம்மந்தம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

நாங்கள் கொரோனா காலகட்டத்தில் சொந்த ஊரான மூலைக்கரைப்பட்டிக்கு வந்து விட்டோம். அதற்கு பிறகு தான் நெப்போலியனின் மாமனார் வீட்டிற்கு வந்து எங்களிடம் பேசினார். என்னுடைய மகள் எனக்கு இந்த கல்யாணம் ஓகே என்று சொல்லிவிட்டார். நாங்கள் இந்த கல்யாணத்தில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு முன்பே என்னுடைய மகள் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிவிட்டாள். எங்கேஜ்மென்ட்க்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் பேசி முடித்தோம்.

சமூக வலைத்தளங்களில் வரும் நெகட்டிவ் கமண்டுகளை நாங்கள் கண்டு கொள்வது கிடையாது. காரணம் நாங்கள் யாரும் அதிகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது இல்லை என்பதால் அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் சொந்தக்காரங்களும், வீட்டை சுற்றி இருப்பவர்களும் எங்களை கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார்கள். அதனாலேயே நாங்கள் வீட்டை விட்டு வராமல் ஒரு மாதத்திற்கு வீட்டிற்குள் தான் இருந்தோம்.

பிறகுதான் நாம் இப்படியே எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? நாம் எந்த தப்பும் பண்ணவில்லை நாம் கடவுளுக்கு மட்டும்தான் பயப்பட வேண்டும். வேரு யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்து நாங்கள் வெளியே வந்தோம். இந்த திருமணத்திற்கு அக்ஷயாவை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. தனுஷை அவளுக்கு ரொம்பவும் பிடித்த காரணத்தால்தான் அவள் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள் என்று அந்த பேட்டியில் அக்ஷயாவின் அம்மா பேசியிருக்கிறார்.

Read more ; ”உனக்கு வேலை ரெடி பண்ணி தர்றேன் வீட்டுக்கு வா”..!! இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்த பேராசிரியர்..?

Tags :
Advertisement