முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைவது எப்படி? - யூடியூபர் வீடியோவால் அதிர்ச்சி..!!

An incident in which a Bangladeshi YouTuber demonstrated how to illegally enter India without a passport or visa has created quite a stir.
05:24 PM Jul 27, 2024 IST | Mari Thangam
Advertisement

பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் சட்டவிரோதமாக எப்படி இந்தியாவுக்குள் நுழைவது என்பதை வங்கதேசம் யூடியூபர் ஒருவர் நிரூபித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.

Advertisement

அந்த வீடியோவில், ரோஹிங்கியாக்கள் உள்ளிட்ட சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் எப்படி இந்தியாவிற்குள் நுழைகிறார்கள் என்பதை அவர் விளக்கியுள்ளார். மேலும், லட்சக்கணக்கான ரோஹிங்கியா சமூகத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, இங்குள்ள சலுகைகளைப் பெறுவதற்கான அனைத்துப் பதிவுகளையும் செய்துள்ளனர் என்பது குறித்து யூடியூபர் DUDI_PARMARAM சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்த வீடியோவில், அவர் வங்கதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள ஜம்காவ் கரோ கிராமத்தின் எல்லையான வங்காளதேசப் பகுதியை நோக்கிச் செல்கிறார். பிறகு அங்கிருந்து மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியை எளிதில் அணுகலாம் என்று அவர் கூறுகிறார். அங்கு ஒரு பலகை, "வங்காளதேசத்தின் கடைசி எல்லை - சர்வதேச எல்லை. கடப்பது தடைசெய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில், அவர் இந்தியா மற்றும் வங்கதேசத்தை இருபுறமும் காட்டும் மைல்கல்லைக் காட்டுகிறார். இருப்பினும், இந்த எல்லையில் வேலி அல்லது அது போன்ற எதுவும் இல்லை.

சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் நேற்று பகிரப்பட்ட 21 நிமிட இந்த வீடியோ மூலம், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு எப்படி சட்டவிரோதமாக நுழைகிறார்கள் என்பதை அந்த யூடியூபர் காட்டியுள்ளார். ராணுவம், காவல்துறை, உள்ளூர்வாசிகள் குறித்த எந்த பயமும், பதற்றமும் இல்லாமல் எளிதாக இந்தியாவுக்குள் அவர் நுழையும் இந்த வீடியோ தற்போது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.

Read more ; பெற்றோர்களே..!! குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் முன் இந்த Settings-ஐ மாற்ற மறந்துறாதீங்க..!!

Tags :
Bangladeshi YouTuberwithout passport
Advertisement
Next Article