'நீயெல்லாம் என்ன கேள்வி கேக்குறீயா?' பழங்குடியின பெண் மீது தாக்குதல்.. வாயில் மனித மலத்தை திணித்த கொடூரம்..!!
பயிரை சேதப்படுத்தியதை தட்டிக்கேட்ட பழங்குடியின பெண்ணில் வாயில் மலத்தை திணித்த கொடூரம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜுராபந்த் எனும் கிராமத்தில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அபய் பக் எனும் வேறு சமூகத்தை சேர்ந்த நபர், அந்த பெண்ணுக்கு சொந்தமான வயலில் டிராக்டரை ஓட்டி சென்றிருக்கிறார். இதனால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவத்தை கண்டித்து இளம்பெண்ணும் அவரது உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பழிவாங்க அந்த பெண் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அபய் பக் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இளம்பெண்ணின் நெஞ்சை பிடித்து கீழே தள்ளி ஆபாசமான வார்த்தைகளால் சாதிய ரீதியாக திட்டியிருக்கிறார். இந்த சண்டையை தடுக்க வந்த இளம்பெண்ணின் தாயின் கழுத்தை பிடித்து நெரித்த அபய் பக், வயது வித்தியாசம் இல்லாமல் தரக்குறைவாக திட்டியிருக்கிறார்
பின்னர் மனித மலத்தை எடுத்து இளம்பெண்ணின் முகம் முழுவதும் பூசி, அவரது வாயிலும் திணித்திருக்கிறார். இந்த சம்பவம் கிராமத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றக்கொண்ட போலீசார் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். குற்றம் செய்த நபர் தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து பேசிய காந்தபாஞ்சி எஸ்டிபிஓ கௌரங் சரண் சாஹு, "தாம் மோசமாக தாக்கப்பட்டதாகவும், மனித மலத்தை வாயில் வலுக்கட்டாயமாக திணித்ததாகவும் இளம் பெண் புகார் கொடுத்திருக்கிறார். இது குறித்து விசாரணை செய்து வருகின்றோம். குற்றம்சாட்டவரை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்," என்றார்.
பலங்கிர் காவல் கண்காணிப்பாளர் கிலாரி ரிஷிகேஷ் தினியாண்டியோ கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டுள்ள டிராக்டர் ஓட்டுநரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாவட்டங்களில் அந்த நபர் தலைமறைவாக இருக்கலாம் என்பதால் அங்கும் போலீசார் தேடி வருகின்றனர்,"என்றார். இதற்கிடையே புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த எம்பி நிரஞ்சன் பிசி, "குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை," என்று கூறினார்.
Read more ; பெண் குழந்தைகளுக்கு ஹெல்தி ஸ்நாக்ஸாக என்னவெல்லாம் கொடுக்கலாம்..?