100 நாள் வேலைத்திட்டம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!
100 நாள் வேலை திட்டம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், குளங்கள் தூர்வாறுதல், கால்வாய்களை பராமரிப்பது, அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வது போன்ற பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூகத் தணிக்கை தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை தெரிவிக்க, 18004252152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறும், இது தொடர்பான மாவட்ட வாரியான குறைதீர்க்கும் அலுவலர்கள் குறித்த விவரங்கள், வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருபக்கம் ஊதிய உயர்வு, மறுபக்கம் புகார்களின் மீது நடவடிக்கை என தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 5000 புதிய சிறு குளங்கள் ரூ.250 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ”ஒரு கிராம ஊராட்சியில், குறைந்தது ஒரு புதிய குளம் உருவாக்கலாம். நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருக்கும் பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட குளங்களை உருவாக்கலாம். ஏரி மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில், புதிய குளம் அமைப்பதாக இருந்தால், அப்பகுதி 10 வருடங்களுக்கும் மேலாக துார்வாரப்படாத பகுதியாக இருக்க வேண்டும். சமுதாய குளங்களை உருவாக்கினாலும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது. புதிய குளங்களை உருவாக்கும் போது, அவற்றுக்கு தண்ணீர் வருவதற்கு, புதிய கால்வாய்களை அமைக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : விஜய்யை வெச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்..!! Dolly Chai Wala-வை வச்சி டூப் போட்ருக்காங்க..!!