முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சர்ச்சைக்கெல்லாம் முற்றுப்புள்ளி.. அயோத்தியில் முதல் முறையாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

03:41 PM May 02, 2024 IST | Mari Thangam
Advertisement

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அயோத்தி குழந்தை ராமர் கோவில் மட்டுமின்றி குபேர் டீலா உள்ளிட்ட பல கோவில்களில் ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்துள்ளார்.

Advertisement

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்காமல் இருந்தது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் திரெளபதி முர்முவை புறக்கணித்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் சூழலில் தான் அவர் இன்று அங்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 3 அடுக்குகளுடன் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 22ம் தேதி கோவில் திறப்புக்கான பிரதிஷ்டை விழா நடந்தது. 

கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் ராமர் கோவிலுக்கு இன்று முதல் முறையாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்றார். கோவில் திறந்து 4 மாதங்கள் கழித்து அவர் முதல் முறையாக இன்று கோவிலில் பாலராமரை தரிசனம் செய்தார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அயோத்தி சென்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். அதன்பிறகு திரெளபதி முர்மு அயோத்தியில் சிறப்பு தரிசனம் மற்றும் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகையையொட்டி அயோத்தி கோவில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
ayothi ramar templeDroupadi Murmu
Advertisement
Next Article