பௌத்தர்கள் வாழும் தாய்லாந்திலும் ஓர் அயோத்தி!… ராமர் வழிபாட்டுடன் ராமாயணத்தை படிக்கும் மக்கள்!
அயோத்தியில் ராம்லாலா பிரான் பிரதிஷ்டா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, இந்தியாவின் அயோத்தி நகரம் மிகப்பெரிய சுற்றுலா தளமாக எதிர்காலத்தில் திகழும். இதற்காக பல்வேறு திட்ட பணிகளும் நடைபெற்றுவருகிறது. பொருளாதாரத்தை உயர்த்த ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் அமைப்பு என பல்வேறு திட்டங்களும் போடப்பட்டு வருகிறது. உலகளவில் மிகவும் பிரபலமாக பிரமாண்டமாக மாறிய அயோத்தியை போன்று, தாய்லாந்திலும் ராமர் வழிபாட்டுடன் ராமாயணத்தை படிக்கும் அயுத்தயா நகர மக்கள் குறித்தும் அவர்களது வாழ்க்கை முறைகள் குறித்தும் பார்க்கலாம்.
அயுதயா நகரம் தாய்லாந்தில் உள்ளது. இந்நாட்டில் 95 வீதமான மக்கள் பௌத்தர்கள். இருப்பினும், தாய்லாந்தில் பல கோயில்களைப் பார்க்க முடியும். அதாவது ஒரு காலத்தில் இந்துக்கள் இங்கு அதிக அளவில் வாழ்ந்துள்ளனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. வரலாற்றை உற்று நோக்கும் போது 6ஆம் நூற்றாண்டிலிருந்தே தாய்லாந்திற்கு இந்துக்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
9ஆம் நூற்றாண்டில் அயுத்யா, கெமர் பேரரசின் கீழ் இருந்தது. இந்து மதம் இதில் தனிச் செல்வாக்குடன் இருந்துள்ளது. அந்த நேரத்தில், அங்குள்ள அரசன் ஜெயவர்மன் காலத்தில்தான், அயுத்யா தாய்லாந்தின் பண்டைய தலைநகராக ஆக்கப்பட்டது மற்றும் பேரரசு முழுவதும் பல இந்து கோவில்கள் கட்டப்பட்டன. இங்குள்ள மக்கள் ராமரை தங்கள் இலட்சியமாக கருதினர். இந்த நகரத்தில் இன்றும் பலர் ராமரை வழிபடுவதும், பூஜையின் போது ராமாயணம் படிப்பதும் உண்டு. இங்குள்ள அரச குடும்பத்தின் சில பழக்கவழக்கங்கள் இந்து மதத்தின் பல மரபுகளைப் போலவே இருக்கின்றன. அயோத்தி ராம்லாலா பிரான் பிரதிஸ்தா திட்டத்திற்காகவும் அயுத்யாவிலிருந்து மண் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.