For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளை... வருவாய் கோட்டாட்சியர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி...!

An attempt was made to kill the Revenue Commissioner by running a lorry on him
06:05 AM Jun 18, 2024 IST | Vignesh
புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளை    வருவாய் கோட்டாட்சியர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி
Advertisement

புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் கோட்டாட்சியர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி.

Advertisement

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனைக்குச் சென்ற வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி அவர்கள் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அதிகரித்து வரும் மணல் கொள்ளைகளும், அதனை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. மணல் கடத்தலை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் அவர்களின் படுகொலைக்கு பின்பும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசின் அலட்சியப் போக்கே அரசு அதிகாரிகளின் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement