திடீர் ட்விஸ்ட்.. சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் மேல் முறையீடு..!! சிக்குவாரா ஹேம்நாத்?
சின்னத்திரையில் தனது திறமையான நடிப்பின் மூலம் மக்களின் மனங்களை வென்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சித்ராவின் மரணத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரின் கணவர் ஹேம்நாத் மீது நசரத்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கு விசாரணையானது திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ரேவதி “சித்ராவின் மரண வழக்கில் கணவர் ஹேம்நாத்திற்கு தொடர்பு உள்ளது என்று, போதுமான ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை” என்று கூறி, ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத் விடுதலையை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், அரசு தரப்பு சாட்சியங்களை கவனத்தில் கொள்ளாமல் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read more ; யூகலிப்டஸ் மரங்கள் அதிக தண்ணீரை உறிஞ்சாது.. எல்லாமே கட்டுக் கதை..!! – மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்