For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தை மிஞ்சும் அறிவிப்பு..!! மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.8,500..!! விவசாய கடன்கள் தள்ளுபடி..!!

04:13 PM Apr 03, 2024 IST | Chella
தமிழகத்தை மிஞ்சும் அறிவிப்பு     மாதந்தோறும் பெண்களுக்கு ரூ 8 500     விவசாய கடன்கள் தள்ளுபடி
Advertisement

தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அவருடைய தங்கை சர்மிளாவுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்து தேர்தல் களத்தில் இறக்கி உள்ளது. சர்மிளா, அண்ணன் என்று கூட பார்க்காமல் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவர் மூலம் ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்த காங்கிரஸ் துடிக்கிறது.

Advertisement

இந்நிலையில், பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சர்மிளா வெளியிட்டார். அதில் 9 முக்கிய உத்தரவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 10 ஆண்டு காலத்துக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். ஆந்திராவில் ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் மாதம், 8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2000 வழங்கப்படும். இந்த பணம் குடும்ப தலைவிகளிடம் தரப்படும்.

100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும். கேஜி முதல் பிஜி வரை அதாவது மழலையர் வகுப்பு முதல் முதுநிலை கல்வி வரை இலவசமாக கல்வி வழங்கப்படும். வீடற்ற ஏழைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டித் தரப்படும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதிகள் ஆந்திராவில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.

Read More : டாக்சி கட்டணம் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Advertisement