உறவினர் ஒப்புதல் இன்றி உடல் உறுப்புகள் தானம்..!! - சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு ஆலோசனை
உயிருடன் இருக்கும்போது உடல் உறுப்புகள் தானம் செய்வதாக பதிவு செய்தவரின் இறப்புக்கு பிறகு அவர்களின் உறவினர்கள் ஒப்புதல் இல்லாமல் தானம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் வரவுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இறந்தநபர் உயிருடன் இருக்கும்போது கண் தானம் செய்வதாக பதிவுசெய்து இருந்தாலும், உறவினர்களின் ஒப்புதல் கட்டாயமாகும். உயிருடன் இருக்கும்போது சுயநினைவுடன் ஒருவர் தனது கண்களை தானம் கொடுப்பதாக பதிவு செய்திருந்தாலும், அவர் இறந்த பின்னர், அவரது கண்களை தானம் அளிக்க பெரும்பாலான உறவினர்கள் முன்வருவதில்லை. இதன் காரணமாக ஆண்டுதோறும் பார்வையற்றவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சட்டம்-1994 சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த சட்ட திருத்தம் மேற்கொண்டால் இறந்த நபர் உயிருடன் இருக்கும்போது கண்களை தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தால், உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் இறந்தவர்களின் கண்களைதானமாக பெற முடியும்.
அதேபோல ஒருவர் உயிருடன் இருக்கும்போது தனது இறப்புக்கு பின்னர் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக விருப்பம் தெரிவித்து பதிவு செய்து இருந்தால், உறவினர்களின் ஒப்புதல் இன்றி உடலை மருத்துவக் கல்லூரியால் பெற்றுக் கொள்ள இயலும். இதை நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
Read more ; மின்வெட்டு குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டுமா..? அப்படினா உடனே இதை பண்ணுங்க..!!