LLR பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும்...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!
வாகனம் ஓட்ட LLR பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும்.
இடைத்தரகர்களுக்கு அதிக தொகை செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மையங்களில், 60 ரூபாய் சேவைக் கட்டணமாகச் செலுத்தி, கற்றல் உரிமத்திற்கு (LLR) பதிவு செய்து கொள்ளலாம்.
எல்.எல்.ஆர்.க்கு விண்ணப்பிக்க டிரைவிங் ஸ்கூல்கள், பிரவுசிங் சென்டர்களை மட்டுமே பொதுமக்கள் சார்ந்திருப்பதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்த இடைத்தரகர்களுக்கு தேவையற்ற கட்டணம் செலுத்துவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கியா நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் ஏ சண்முக சுந்தரம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தமிழகம் முழுவதும் உள்ள 55,000 இ-சேவை மையங்களில் சேவைக் கட்டணமாக ரூ.60 செலுத்தி LLR-க்கு விண்ணப்பிக்கலாம். இது தவிர, விண்ணப்பதாரர்கள் ஒரு வகை வாகனத்திற்கு எல்.எல்.ஆர்.க்கு ரூ.230 மற்றும் இரட்டை வகுப்பு வாகனத்திற்கு ரூ.380 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் உடல் தகுதிக்கான விண்ணப்பத்துடன் வயது மற்றும் முகவரிச் சான்றினைச் சமர்ப்பிக்க வேண்டும்.