For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சற்றுமுன்...! மாணவர்கள் வங்கி கணக்கு... தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு...!

An action order has been issued to schools across Tamil Nadu
06:05 AM Aug 06, 2024 IST | Vignesh
சற்றுமுன்     மாணவர்கள் வங்கி கணக்கு    தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு
Advertisement

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதல் தொடர்பாக மாணவர்களின் வங்கிக் கணக்கை சரிபார்த்து EMIS -ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10,11 ஆம் வகுப்பு பயின்று 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 5000/-சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட திட்டத்திற்கென 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள 5,16,135 மொத்த மாணவர்களில் முதற்கட்டமாக 4,64,684 மாணவர்களுக்கு சிறப்பு வஊக்கத் தொகை வழங்கும் பொருட்டு சார்ந்த மாணவர்கள் பயின்ற மாவட்டத்தின் பெயர், School Name. School Udise Number. Student EMIS Number. Bank Name, Bank IFSC Code No, Student Account Number, ஆகிய விவரங்கள் பார்வை 2-ல் காணும் EMIS இணையதளத்திலிருந்து பெறப்பட்டு பார்வை 3-ல் காணும் கடிதத்தில் TNPFC-க்கு அனுப்பப்பட்டுள்ளது.

TNPFC-மேலாளரின், கடிதத்தில் EMIS இணையதளத்திலிருந்து பெறப்பட்டுள்ள 4,64,684 மாணவர்களின் விவரங்களில் 59,283 மாணவர்களின் விவரங்கள் மட்டுமே சரியாக உள்ளதாகவும் மீதமுள்ள 4,05,401 மாணவர்களின் வங்கிக் கணக்கு எண், Bank IFSC Code No ஆகிய விவரங்கள் தவறுதலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களினை மீண்டும் ஆய்வு செய்து, மாணவர்கள் பயின்ற பள்ளி, School Udise Number. Student EMIS Number. Bank Name, Bank IFSC Code No, Student Account Number, ஆகிய விவரங்களினை இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள EMIS இணையதளத்தில் 05.08.2024-க்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement