சற்றுமுன்... தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த அறிக்கையை EMIS இணையதளம் வாயிலாக புகைப்படத்துடன் பதிவேற்ற செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு விவரங்களை துறைசார்ந்த பொறியாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி, பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் என்றும், பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த அறிக்கையை EMIS இணையதளம் வாயிலாக புகைப்படத்துடன் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.