அமுல் பால் விலை உயர்வு..! இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய கட்டணம்..! பொதுமக்களுக்கு அதிர்ச்சி..!
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உறவு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) வெளியிட்ட அறிக்கையில், GCMMF ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவு மற்றும் பால் உற்பத்தியின் அதிகரிப்புக்கு மத்தியில் விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரை லிட்டருக்கு 1ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி அமுல் கோல்டு, அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் மில்க் என அனைத்து அமுல் பால் வேரியண்ட்களும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், அமுல் தாசா சிறிய பையின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு என்பது சராசரி உணவுப் பணவீக்கத்தை விட மிகக் குறைவான MRP யில் 3-4 சதவிகிதம் அதிகரிப்பதைக் குறிக்கிறது. பிப்ரவரி 2023 முதல், அமுல் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமுல் பால் புதிய விலை நிலவரம் :
அமுல் கோல்ட்: 500 மில்லி அமுல் தங்கத்தின் விலை ரூ.33 ஆகவும், ஒரு லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ.64ல் இருந்து ரூ.66 ஆகவும் உயர்ந்துள்ளது.
அமுல் எருமை பால்: 500 மில்லி அமுல் எருமை பால் விலை ரூ.36 ஆக அதிகரித்துள்ளது.
அமுல் சக்தி: 500 மில்லி அமுல் சக்தியின் விலை ரூ.30 ஆக அதிகரித்துள்ளது.
7 கட்டங்களாக நடந்த 18ஆவது மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் அதிரடியாக உயர்ந்தது, அதனைத் தொடர்ந்து குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் அமுல் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More: ஷாக்!… கரும்பு ஜூஸ் ஆரோக்கியமற்றதா?… ICMR எச்சரிக்கை!