மூளை உண்ணும் அமீபாவால் 2 சிறுவர்கள் பலி!! கேரளாவில் சோகம்!
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்ற அரிதான நோயானது தற்போது கேரளாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது ஒரு அரிய, மத்திய நரம்பு மண்டலத்தில் ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri , ஒரு வகை அமீபாவால் ஏற்படுகிறது.
இரண்டு மாதங்களுக்குள், மூன்று குழந்தைகளுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏழு ஆண்டுகளாக ஆறு பேரை மட்டுமே பாதித்த இந்நோய், தற்போது மாநிலத்தில் தீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கோழிக்கோடு ஃபெரோக்கைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒரு தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். முன்னதாக, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி மே 21 அன்று இறந்தார், அதைத் தொடர்ந்து ஜூன் 16 அன்று கண்ணூரில் 13 வயது சிறுமி இறந்தார்.
மக்கள் அசுத்தமான நீர் அல்லது புதிய நீரில் நீந்தும்போது அமீபாக்கள் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையலாம். 5 வயது சிறுமி மலப்புரத்தில் உள்ள கடலுண்டி ஆற்றிலும், மற்ற இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு ஆறுகளிலும் குளித்த பிறகு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸின் உயிர்வாழ்வு விகிதம் மூன்று சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more | பிரேக்கிங் பிரச்னைகளுக்கு மட்டும் அதிக நிவாரணமா? – வானதி சீனிவாசன் காட்டம்