For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Alert: மூளையை தின்னும் அமீபா...! தமிழக சுகாதாரத் துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

Amoeba that eats the brain... 4 people died...! Important order issued by Tamil Nadu Health Department.
08:08 AM Jul 08, 2024 IST | Vignesh
alert  மூளையை தின்னும் அமீபா     தமிழக சுகாதாரத் துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு
Advertisement

கேரளாவில் கடந்த சில மாதங்களில் அரிதான மூளையைத் தின்னும் அமீபாவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மூளையைத் தின்னும் அமீபா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற மூளையைத் தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி, தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.

நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement