For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அச்சுறுத்தும் அமீபா மூளைக்காய்ச்சல்..!! குழந்தைகளை இதற்கு மட்டும் அனுமதிக்காதீங்க..!!

Puducherry Health Department Dr Sriramalu issued a press release. In it, he has published guidelines to prevent the spread of meningitis.
11:35 AM Jul 12, 2024 IST | Chella
அச்சுறுத்தும் அமீபா மூளைக்காய்ச்சல்     குழந்தைகளை இதற்கு மட்டும் அனுமதிக்காதீங்க
Advertisement

கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அசுத்தமான குளத்தில் குளிக்கும் போது, அமீபா மூக்கு வழியாக மூளைக்கு சென்றுவிட்டதாகவும், அதனால் இந்த மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை டாக்டர் ஸ்ரீராமலு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மூளைக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதன்படி, மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டவர்களுக்கு தலைவலி, வலிப்பு, பிரம்மை போன்ற சிந்தனைகள், மனக்குழப்பம், கடினமான கழுத்து வலி, வாந்தி, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள தேங்கி நிற்கும் அழுக்கு நீரில் குளிப்பதற்கு அனுமதிக்க கூடாது.

தேங்கி நிற்கும் குளங்கள், ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்றவைகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, நீச்சல் குளத்தில் சுகாதாரம் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதில், போதுமான குளோரினேசன் இருக்கும் குளம் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருப்பதுடன் அதில் பொதுமக்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இதற்காக உறுதிப்பாட்டை உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ரூ.279-க்கு ரீசார்ஜ் பண்ணுங்க..!! இத்தனை சலுகைகளா..? புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல் நிறுவனம்..!!

Tags :
Advertisement