நூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய்... இப்படி மட்டும் சாப்பிடாதீங்க...
ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒன்று என்றால் அது நெல்லிக்காய் தான். அப்படி இந்த நெல்லிக்காயில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்... இந்த நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. ஆம், வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நெல்லிக்காயில் உள்ளது. இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, பல நோய்களை முழுமையாக குணப்படுத்தும்.
ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல ஊட்டச்சத்து கூறுகளின் பவர்ஹவுஸ் என அழைக்கப்படும் நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால், உடல் பருமனை வேகமாக குறைக்கலாம். ஏனென்றால், நார்ச்சத்து நிறைந்த நெல்லிக்காய், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் அதிக கலோரிகள் எரிந்து, எடை இழப்பை துரிதப்படுத்தும். நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலில் இருந்து நச்சுக்களை நீக்கும். மேலும், கல்லீரலில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்தும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட நெல்லிக்காய் நிவாரணம் கொடுக்கும்.
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும். நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லாமல், நமது அழகிற்கும் பயனளிக்கும். ஆம், அடர்த்தியான அழக்கான கூந்தலைப் பெற தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிடலாம். இளநரை ஏற்படுவதை தடுக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது. நெல்லிக்காயை நீங்கள் சாறு தயாரித்து குடிக்கலாம், நெல்லிக்காயை சாலட் வடிவில் உணவில் சேர்க்கலாம். சைவ அல்லது அசைவ சமையல் உணவுகளில் சிறிது நெல்லிக்காய் துண்டுகளைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் உணவின் சுவை மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம். ஆனால், நெல்லிக்காயை ஊறுகாய் போட்டு மட்டும் சாப்பிடவே கூடாது. இதனால் உடலுக்கு நன்மையை விட தீமை தான் அதிகம்.
Read more: நின்றபடி தண்ணீர் குடித்தால் ஆபத்தா? நிபுணர் கூறும் அறிவுரை…